ஒரு லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம்

ஒரு லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2023-08-19 19:00 GMT

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில விவசாய பிரிவு பொதுச் செயலாளர் சுர்ஜீத் சங்கர் தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினார். அப்போது அவர், 'மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணத்தை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் சாகுபடி, வேலை இல்லாத காலத்தில் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், வட்டார தலைவர் வேணுகோபால். மாவட்ட இணைச் செயலாளர் பாரதிராஜா, நகர துணைத்தலைவர் கார்த்தி, நகர செயலாளர் ஹரி, மாவட்ட பொதுச்செயலாளர் பாலா, மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசிகாமணி, மணிமேகலை, விவசாய பிரிவு செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய பொருளாளர் மனிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்