உலக தேங்காய் தின விழிப்புணர்வு ஊர்வலம்

பேராவூரணியில் உலக தேங்காய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-02 20:16 GMT

பேராவூரணி;

பேராவூரணியில் தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் சமூக நல அமைப்பு சங்கம் சார்பில் உலக தேங்காய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊா்வலத்துக்கு ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் பண்ணவயல் இளங்கோ தொடங்கி வைத்து பேசினாா்.தேங்காயின் சிறப்புகள் பற்றி டாக்டர் நீலகண்டன் பேசினார். ஊர்வலம் பயணிகள் மாளிகையில் இருந்து தொடங்கி, முதன்மைச் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் வரை சென்றடைந்தது. ஊர்வலத்தில் தேங்காயின் நன்மைகள் பற்றிஅனைத்து பொது மக்களுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அனைத்து பொதுமக்களும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்