ரூ.51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

ரூ.51 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;

Update:2022-12-14 01:00 IST

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. கடந்த வாரம் நடந்த ஏலத்தில் 1,676 கிலோ தேங்காய்களை ‌விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.28.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.12.19-க்கும், சராசரியாக ரூ.25.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 140-க்கு விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்திற்கு 2,183 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.26.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19- க்கும், சராசரியாக ரூ.‌24-க்கும் ஏலம் போனது. மொத்தம்ரூ.51 ஆயிரத்து 822-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்