பிரதமர், முதல்-அமைச்சருக்கு தேங்காய் அனுப்பிய விவசாயி

Update: 2023-08-15 18:05 GMT


தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நீரா.பெரியசாமி நேற்று பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருக்கு தேங்காய் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி நேற்று குடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் தேங்காய்களை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்