பனமரத்துப்பட்டி:-
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 42 விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.40-க்கும், அதிகபட்சமாக ரூ.78.85-க்கும் விற்பனையானது. மொத்தம் 3.65 டன் அளவுள்ள கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.