கோ-ஆப்டெக்ஸ் தற்போது லாபத்தில் இயங்குகிறது

தமிழகத்தில் நஷ்டத்தில் செயல்பட்ட கோ-ஆப்டெக்ஸ் தற்போது லாபத்தில் இயங்குகிறது என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2023-05-12 19:00 GMT

கோவை

தமிழகத்தில் நஷ்டத்தில் செயல்பட்ட கோ-ஆப்டெக்ஸ் தற்போது லாபத்தில் இயங்குகிறது என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

திறப்பு விழா

கோவை சாய்பாபகாலனியில் ரூ.50 லட்சத்தில் நவீனப்படுத்தப் பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையக திறப்பு விழா நடந்தது. இதற்க கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை தாங்கினார். கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார்.

நவீனப்படுத்தப்பட்ட விற்பனையகத்தை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த அனைத்து ரக துணிகளையும் பார்வையிட்டார்.

பஇதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

லாபத்தில் இயங்கி வருகிறது

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து உள்ள நிலையில் கைத்தறித்துறை முன்னேற் றம் அடைந்து இருக்கிறது. துணிநூல் மற்றும் நெசவாளர் முன்னேற்றத்துக்கும் சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் கைத்தறித்துறை சார்பில் மொத்தம் 154 கடைகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 105 கடைகள் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது கோ-ஆப்டெக்ஸ் ரூ.9 கோடி நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது. நாங்கள் வந்த உடன் 45 கடைகளை புனரமைத்தோம். இதன் காரணமாக தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்கி வருகிறது.

உள்ளே அனுமதிக்கவில்லை

நீலகிரி மாவட்டத்தில் தோடர்களுக்கு சங்கம் அமைத்து அவர்க ளின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் 18 மில்கள் இருந்தன. தற்போது 6 மில்கள் இருந்தாலும் அதுவும் நஷ்டத்தில்தான் இயங்கி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மெகா டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக் கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள என்.டி.சி. மில்கள் மூடப் பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அந்த ஆலையை பார்வை யிட சென்றபோது என்னை உள்ளேயே அனுமதிக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கொள்கை முடிவு

விழாவில் பங்கேற்ற வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, என்.டி.சி. மில்களை திறப்பது தொடர்பாக மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

விழாவில் மேயர் கல்பனா, மண்டல தலைவர் மீனாலோகு, கவுன்சிலர் சரவணகுமார், தி.மு.க. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்