கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர்கள் பணி திறன் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர்கள் பணி திறன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-14 19:00 GMT

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர்கள் பணி திறன் ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் கோ.க.மாதவன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு வழங்கப்பட வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ரூ.6 லட்சத்து 67 ஆயிரத்து 402 மற்றும் கல்விநிதி தொகை ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 935 ஆக மொத்தம் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்து 337-க்கான காசோலையை தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ச.லீ.சிவகாமி, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சு.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்