கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

Update: 2022-07-29 20:19 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் கோவிந்தன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராமச்சந்திரன், தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயலாளர் கந்தவேல் மற்றும் நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தில், ஊதிய உயர்வு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது பணிபுரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மாற்று ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முடிவில் போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் நிறைவு செய்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்