முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக 72 மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், திமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.