தேசிய மின் சிக்கன வார நிறைவு விழா

ஓசூரில் தேசிய மின் சிக்கன வார நிறைவு விழா நடந்தது.

Update: 2022-12-21 18:45 GMT

ஓசூர்

ஓசூரில் தேசிய மின் சிக்கன வார நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கோட்ட செயற்பொறியாளர் கிருபானந்தன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஊர்வலம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின்சாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொறியாளர் மற்றும் பணியாளர்கள் நடித்து காண்பித்தனர்.

இதில், மாநில பா.ஜனதா தொழில்துறை பிரிவு செயலாளர் ராமலிங்கம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை, விவசாய சங்க நிர்வாகிகள், தொழிற்சாலை பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், உதவி பொறியாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்