தெற்கு மண்டல மாணவிகளுக்கான கோகோ போட்டி

ஓசூரில் தெற்கு மண்டல மாணவிகளுக்கான கோகோ போட்டியில் 6 மாநில அணிகள் பங்கேற்கின்றன.

Update: 2023-10-07 19:07 GMT

ஓசூர்

ஓசூரில் உள்ள புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய கோகோ கூட்டமைப்பு சார்பில் கேலோ இந்தியா தெற்கு மண்டல அளவிலான 14 மற்றும் 18 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோகோ லீக் போட்டிகள் நடந்தது. போட்டிகளை ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த். முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், தமிழ்நாடு கோகோ கழக பொதுச்செயலாளர் நெல்சன் சாமுவேல், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் ராகவன், பள்ளியின் தாளாளர் ஏஞ்சலா ஆகியோர் புறாக்களை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த கோகோ விளையாட்டில் தேசிய அளவில் விளையாடி வெற்றி பெற்ற மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய 2 பிரிவுகளில் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டிகளில் மாணவிகள் மட்டுமின்றி பயிற்றுனர்கள், மேலாளர்கள் மற்றும் நடுவர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்