மயானத்தில் புதர்களை அகற்றும் பணி

மயானத்தில் புதர்களை அகற்றும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-18 18:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சாமுண்டீஸ்வரி கோவில் நெடுஞ்சாலை அருகே உள்ள மயானத்தில் முன்புதர்கள் அடர்ந்து காணப்பட்டன. இதனை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணியாளர்களைக் கொண்டு மயானத்தில் முட்புதர்களை அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி நேற்று தூய்மைப்பணி நடந்தது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகராஜா, நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் டாக்டர். பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் சாலை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்