'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி

புதுப்பேட்டை பகுதியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

Update: 2023-05-12 18:34 GMT

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணியை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் தூய்மை பணியாளர்களுடன் மேற்கொண்டார் அப்போது அவருக்கு இளநீர் வழங்கப்பட்டது. ஆனால் அதனை அவர் பருகாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட மூதாட்டிகளுக்கு வழங்கினார். அதன் பிறகு கலெக்டர் கூறுகையில், ''தற்பொழுது எங்கு பார்த்தாலும் நெகிழி குப்பைகளாக காட்சியளிக்கிறது, இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் போகின்றது. இதனை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களை அடிக்கடி பயன்படுத்தும் பொழுது வெளுத்து போய் விடுகின்றது. இதன் மூலம் புற்றுநோய் உண்டாக சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது.

உணவகங்களில் டீக்கடைகளில் நெகிழிப் பொருட்களின் மூலம் உணவுகளை உட்கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக வாழை இலை, பாத்திரங்கள் கண்ணாடி டம்ளர்களை உபயோகிக்க வேண்டும்'' என்றார்..

நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்