நாரணாபுரம் பஞ்சாயத்தில் தூய்மை பணி
சிவகாசி அருகே நாரணாபுரம் பஞ்சாயத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி ஒன்றியத்தில் உள்ள நாரணாபுரம் பஞ்சாயத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது. இதனை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசுபள்ளிகள், அங்கன்வாடிகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.