கோர்ட்டு, பொன்மலை பணிமனையில் தூய்மைப்பணி

திருச்சி கோர்ட்டு, பொன்மலை பணிமனையில் தூய்மைப்பணி நடந்தது.;

Update:2023-10-03 02:22 IST

திருச்சி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் காந்திஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஸ்வச்சதா பக்வாடா என்ற தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்