கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் நீலப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள நாகநாதசாமி கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டனர். தோட்டக்கலை துறை இணை பேராசிரியர் கமல்குமரன் ஆலோசனைப்படி சன்னதிக்குட்பட்ட பகுதியில் தூய்மை செய்து, அந்த இடத்தில் இருந்த மரங்களை அகற்றினர். இந்த பணியில் கல்லூரி வேளாண்மை உதவி அலுவலர் ஜீவன் ராஜ் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் ஈடுபட்டனர்.