தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் செய்தனர்.;

Update:2022-05-28 22:01 IST

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி 11-வது வார்டு உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கற்பக்கனியின் கணவர் சேகர் ஸ்டேட் பாங்க் காலனி, அம்பேத்கர் நகர் பகுதிகளில் சரியான முறையில் குப்பைகள் அகற்றப்படவில்லை என்றும், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தூய்மை பணியாளர்களிடம் கூறி உள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தூய்மை பணியாளர்களை சேகர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் அம்பேத்கர்நகர் சந்திப்பு சாலையில் நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் வடபாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்