பழைய கோர்ட்டு வளாகத்தில் தீவிர துப்புரவு முகாம்

தர்மபுரி நகராட்சி சார்பில் பழைய கோர்ட்டு வளாகத்தில் தீவிர துப்புரவு முகாமை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-21 16:42 GMT

தர்மபுரி:

தர்மபுரி நகராட்சி சார்பில் பழைய கோர்ட்டு வளாகத்தில் தீவிர துப்புரவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். பொறியாளர் ஜெயசீலன், தாசில்தார் ராஜராஜன், கவுன்சிலர் தனலட்சுமி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் சித்ரா விஜயன் முகாமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தூய்மை பணிகளை பார்வையிட்டு அவ்வப்போது தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த முகாமையொட்டி அந்த பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகள், செடி, கொடிகள், முட்புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் நாட்டான் மாது, துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், சீனிவாசலு, பா.ம.க. நிர்வாகிகள் சண்முகம், பெரியசாமி, வெங்கடேசன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்