துப்புரவு பணியாளர்கள் மறியல்
துப்புரவு பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. துப்புரவு பணியாளர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நகர அமைப்பாளர் பாலமுருகன், துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 10 பெண்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.
துப்புரவு பணியில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 60 பேரும் கைது செய்யப்பட்டனர்.