செம்மொழி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி
வைத்தீஸ்வரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செம்மொழி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி நடந்தது.;
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செம்மொழி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமையாசிரியர் சரவணச்செல்வி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ஞானவடிவு வரவேற்றார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலரும் தமிழ் பற்றாளருமான மணிமாறன் கலந்து கொண்டு தமிழின் சிறப்பும் தொன்மையும் என்ற தலைப்பில் பேசினார். பின்னர் தமிழே நீ அல்லவா நான் என்ற தலைப்பில் மாணவி தரணி, பூஜா ஆகியோர் பேசினர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் தேவேந்திரன், வைஜெயந்தி மாலா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் வீரபாண்டியன் செய்திருந்தார்.