கோவில் திருவிழாவில் மோதல்

பேராவூரணி அருகே கோவில் திருவிழாவில் மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-06-05 21:12 GMT

பேராவூரணி, ஜூன்.6-

பேராவூரணி அருகே கோவில் திருவிழாவில் மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவில் திருவிழா

பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள வீமநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் தீர்த்த விழா நடைபெற்றது. தீர்த்த விழாவுக்காக ஆதனூர் தேரடியில் உள்ள சாமியை பல்லக்கு மூலம் எடுத்துக்கொண்டு சென்றனர். அப்போது பல்லக்கிற்கு முன்பு மினி சரக்கு ஆட்டோ கருப்பமனை தேக்கு பாலம் அருகே சென்றது. அப்போது பேராவூரணி அருகே கழனிவாசல் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது50) பட்டாசு வைக்க சென்றார்.அப்போது ஆதனூரைச் சேர்ந்த பிளின்டாப், ஆம்ப்ரோஸ் ஆகிய இருவரும் இங்கு பட்டாசு வைக்க கூடாது என தகராறில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட மோதலில் பிளின்டாப் கீழே கிடந்த கல்லை எடுத்து மினி சரக்கு ஆட்டோ கண்ணாடி மீது வீசியதில் சரக்கு ஆட்டோவின் கண்ணாடி முற்றிலும் சேதம் அடைந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் பிளின்டாப், ஆம்ப்ரோஸ் ஆகிய இருவரும் சேர்ந்து முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முருகன் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளின்டாப், ஆம்ப்ரோஸ் ஆகியோரை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்