அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-08-25 10:04 GMT

சென்னை,

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர்.

இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்