கம்யூனிஸ்டு கட்சியினர்-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மோதல்

முதுகுளத்தூரில் கம்யூனிஸ்டு கட்சியினர்-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மோதிக்கொண்டனர்.

Update: 2023-01-27 18:38 GMT

முதுகுளத்தூர் 

முதுகுளத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மாநாட்டிற்காக நிதி வசூல் செய்து வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வெண்கல குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன், புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மற்றும் முத்துசாமி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் கீழத்தூவல் கணேசன் (வயது 57) அதே கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் அங்குதான் (52) ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.இது குறித்து இருதரப்பினர் அளித்த புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்