ஆக்கிரமிப்பை தடுத்தி நிறுத்திய பொதுமக்கள்

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பை பொதுமக்கள் திடுத்து நிறுத்தினர்.

Update: 2022-08-14 17:22 GMT

நாட்டறம்பள்ளி பகுதியில் ஏரிக்கரையை ஒட்டி உள்ள நில உரிமையாளர் ஒருவர் தனது நிலத்திற்கு தேவையான வழி ஏற்படுத்த ஏரி கரையை ஆக்கிரமித்ததாக முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இந்தநிலையில் நில உரிமையாளர் மீண்டும் தனது நிலத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் வழி ஏற்படுத்தி கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன் தலைமையில் பொதுமக்கள் சென்று பணியை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படும் இடத்தை சர்வே செய்து மேல் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்