சுடுகாட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே சுடுகாட்டை ஆக்கிரமித்து பயிர் செய்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-03 17:17 GMT

சுடுகாடு ஆக்கிரமிப்பு

திருப்பத்தூரை அடுத்த கூடப்பட்டு அருகே உள்ள சுண் ணாம்புகாளை பகுதியில் பொதுமக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடத்திற்கு அதேப்பகுதியை சேர்ந்த ஒருவர் பட்டா பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுடுகாட்டுக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தில் அவர் பயிர் செய்வதற்காக டிராக்டர் வைத்து உழுதுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று சுடுகாட்டு இடத்தை எப்படி விவசாயம் செய்ய டாக்டர் வைத்து ஏர் ஓட்டலாம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த இடத்திற்கு என்னிடம் பட்டா உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர்- ஆலகாயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குரிசிலாப்பட்டு போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் இடத்தை உடனடியாக அளந்து தர வேண்டும் எனவும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிணத்தை புதைக்க வந்த போது இதே போன்று தகராறு செய்து குறித்தும் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், மூலம் நிலத்தை அளக்க உத்தரவிட்டனர். திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகேயன், சிவலிங்கம் ஆகியோர் நிலத்தை அளந்து பார்த்தபோது அந்த இடம் சுடுகாட்டுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. உடனடியாக போக்கைலைன் எந்திரம் கொண்டு அப்பகுதியில் செய்யப்பட்டிருந்த பயிரை அப்புறப்படுத்தி சுற்றிலும் முள்வேலி அமைக்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்