சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு: தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்கு தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம். இங்கு கட்டணமின்றி உணவும், தங்கும் இடவசதியுடன் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-24 18:42 GMT

சென்னை,

தமிழக அரசு சார்பில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பசுமை சூழலுடன் வகுப்பறைகள், தரமான விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன், கட்டணமின்றி உணவுடன், தங்கி படிக்கவும் இடவசதி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

முதன்மை தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அந்தவகையில் இந்த ஆண்டு 225 பேர் தங்கி படிக்க வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இடஒதுக்கீட்டின்படி, தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் வருகிற 28-ந்தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு, 29, 30-ந்தேதிகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு விதிகளுக்குட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கும் வசதிகளுடன் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்