சி.ஐ.டி.யூ. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லதா, ஏழுமலை, சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சாலையோர வியாபாரிகளையும், பாதசாரிகளையும் மதுபோதையில் அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர விற்பனைக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கவேண்டும். விடுபட்ட அனைவரையும் கணக்கெடுத்து உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனைக் குழுவிற்கான தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடனாக 15 ஆயிரம் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். மயிலாடுதுறை வண்டிகாரர் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோர வியாபாரிகளுக்கு கயிறு அடித்து கொடுத்து வியாபாரிக்களுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன இதில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.