அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆயக்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து ெபாதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-17 19:00 GMT

அரசு பஸ் சிறைபிடிப்பு

ஆயக்குடி அருகே வத்தக்கவுண்டன்வலசு கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு பழனி, ஆயக்குடி வந்து செல்கின்றனர். இங்குள்ள மக்களின் வசதிக்காக பழனியில் இருந்து ஆயக்குடி, அமரபூண்டி வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பழனி-வத்தக்கவுண்டன்வலசு இடையே முறையாக பஸ்கள் இயக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பழனியில் இருந்து வத்தக்கவுண்டன்வலசு வந்த அரசு டவுன் பஸ்சை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவர்கள் பாதிப்பு

அப்போது, எங்கள் கிராமத்துக்கு முறையான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே முறையாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆயக்குடி அருகே அரசு டவுன் பஸ் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்