அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-20 12:52 GMT

செங்கம்

செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், விவசாயி.

இவர் அவருக்கு சொந்தமான டிராக்டரை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் டிராக்டரில் இருந்த உதிரிபாகங்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட பொதுமக்கள் செங்கம்-வளையாம்பட்டு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றையும் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்