செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு-ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-05 20:29 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தனி நபர் அனுமதித்ததன் பேரில் ஒரு வீட்டையொட்டி பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அருகே உள்ள வீடுகள் கீழே இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கதிர்வீச்சினால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அருகிலேயே பள்ளி உள்ளது என்றும் கூறி, செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அங்கு பணிக்காக வந்திருந்த ஊழியர்களை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்படாது என்று இடத்தின் உரிமையாளர் உறுதி அளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்