4 இடங்களில் வட்ட சமரச தீர்வு மையங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் வட்ட சமரச தீர்வு மையங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கபட்டது.

Update: 2023-09-09 19:00 GMT

சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் வட்ட சமரச தீர்வு மையங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கபட்டது.

4 இடங்களில்...

சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் 120 மையங்களில், சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய 4 இடங்களில் வட்ட துணை சமரச தீர்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டது.

இதையொட்டி சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1. அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2.செல்வம், கூடுதல் மகிளா குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆப்ரின் பேகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் தொடர் நிகழ்வாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்ட துணை சமரச தீர்வு மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பக்தவச்சலு, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஹரிராமகிருஷ்ணன், வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் கல்யாணி, சமரசர் அண்ணாத்துரை, அரசு வக்கீல் பார்த்தசாரதி மற்றும் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

காரைக்குடி

மேலும் காரைக்குடி வட்ட துணை சமரச தீர்வு மையத்தை தேவகோட்டை சார்பு நீதிபதி வீரணன் திறந்துவைத்தார். நீதித்துறை நடுவர்கள் சுப்பையா, மாரிமுத்து, விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா மற்றும் காரைக்குடி வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் வட்ட துணை சமரச தீர்வு மையத்தை முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி மும்தாஜ் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் சமரசர் .வள்ளியப்பன், திருப்பத்தூர் வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சிங்கம்புணரி வட்ட துணை சமரச தீர்வு மையத்தை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி சாதத்துணிஷா திறந்துவைத்தார்.. நிகழ்ச்சியில் சிங்கம்புணரி வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்