கொசவபட்டி புனித உத்திரியமாதா ஆலய திருவிழா

கொசவபட்டியில் உள்ள புனித உத்திரியமாதா ஆலய திருவிழா நடைபெற்றது.

Update: 2023-07-16 21:00 GMT

சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித உத்திரியமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி நடைபெற்றது.

இதையொட்டி மின்னொளி தேரில் அன்னை எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, ஒயிலாட்டம், கும்மி ஆட்டத்துடன் வீதிஉலா வந்தார். அதேபோல் நேற்று காலையில் தேர்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்