மத்திய அரசை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் ஆர்ப்பாட்டம் -அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு.

Update: 2023-06-26 21:52 GMT

சென்னை,

மணிப்பூர் கலவர விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி துணைத்தலைவர் நவாஸ்கனி, தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஆசீர், செங்கை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் நீதிநாதன், தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், பேராயர்கள் அனைவருமே மணிப்பூரில் மத கலவரத்தை பா.ஜ.க. நடத்தி வருவதாகவும், பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும் என்றும் கருத்துகளை முன்வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்