கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா

பரப்பாடி அருகே கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

Update: 2022-12-14 18:59 GMT

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள கல்மாணிக்கபுரம் மதர் தெரசா முதியோர் இல்லத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவுக்கு நெல்லை திருமண்டல லே செயலர் டி.எஸ்.ஜெயசிங் தலைமை தாங்கினார். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் எம்.பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.விழாவில் பங்கு தந்தை பிரான்சிஸ் கிறிஸ்துராஜா, குருவானவர்கள் கிறிஸ்டோபர் தவசிங், ஜான்சன், பஞ்சாயத்து தலைவர்கள் பி.மகாராஜன் (கண்ணநல்லூர்), வி.இஸ்ரவேல் பிரபாகரன் (இலங்குளம்), எஸ்.ஆர்.முருகன் (பாப்பான்குளம்), ஒன்றிய கவுன்சிலர் ரைகானா ஜாவித், நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் மரியரத்னா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்