தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால் நாட்டு விழா நேற்று நடந்தது.

Update: 2023-04-16 18:45 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால் நாட்டு விழா நேற்று நடந்தது.

சித்திரை தெப்பத்திருவிழா

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி காலை 9 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, போன்றவைகள் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கால்நாட்டப்பட்டது

இதற்கான கால்நாட்டு விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. தாணுமாலய சாமி சன்னதியின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முகப்பில் பந்த கால் நடும் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்