சுப்பிரமணியசாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி

எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி

Update: 2023-04-27 18:45 GMT

வேளாங்கண்ணி:

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு எண்ணெய், சீயாக்காய், பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்