வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.;

Update: 2023-05-03 19:30 GMT

நெல்லையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜபெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. யாகசாலை சிறப்பு பூஜைகள், அதனை தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மகா மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவீதிஉலாவும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்