சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-10 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் வக்கீல் மா.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பழனிவேல் வரவேற்றார். உதவியாளர் திருவேங்கடம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பழுது நீக்கம் செய்து பராமரிப்பு செய்வது, ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன், கனியாமூர் ராஜசேகர், மேல்நாரியப்பனூர் சுதாமணிகண்டன், சக்திவேல், நந்தினி மோகன், தெய்வானை உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) குமரவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்