இளம்பெண்ணிடம் சில்மிஷம்; தொழிலாளி கைது

Update: 2023-08-24 18:45 GMT

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் மூலப்பள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் சிவக்குமார் (வயது 37). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலித்தொழிலாளியான இவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செங்கோடன் மற்றும் போலீசார் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்