குழந்தைகள் தின விழா
புளியங்குடி அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது
புளியங்குடி:
புளியங்குடி அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நிர்வாக ஆலோசகர் முருகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றுப் பேசினார். விழாவினை முன்னிட்டு "டேலண்டினா 2022" என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. விழாவில் தென்காசி தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகள் நடைபெற்றன போட்டிகளில் வெற்றி பெற்ற, கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா முடிவில் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.