குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-13 18:52 GMT

நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் நேற்று சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, துணைத்தலைவர் கண்ணகி தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு பங்கேற்று பேசுைகயில், குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவைக்கு அடிமையாகாமல் இருக்க குழந்தைகளை தினமும் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் பற்றி பெற்றோருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.

இதில் செவிலியர் மீகாள்குமாரி, சமூக பணியாளர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்