குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கூட்டம்
கலவை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
திமிரி
கலவை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கலவை பேரூராட்சி சார்பில் சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த பொது மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி மன்றத் தலைவர் கலா சதீஷ், துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் போன்றவற்றை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இதில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா, செயல் அலுவலர் முத்து, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரன், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' இந்தியா திட்ட மேலாளர் க.நாகப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கிராம செவிலியர் அங்கன்வாடி மகளிர் குழு உறுப்பினர்கள், குழந்தைகள் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.