வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கள ஆய்வு கூட்டம் - 15-ந் தேதி சேலம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி சேலம் செல்கிறார். அவர், 4 மாவட்ட திட்ட பணிகளை 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்.

Update: 2023-02-08 02:59 GMT

சேலம்,


தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கள ஆய்வு கூட்டம் வருகிற 15, 16-ந் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார். கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அனுப்ப உத்தரவிட்டப்பட்டுள்ளது. எனவே இந்த விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்