யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலை - பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-08-02 08:28 GMT

சென்னை,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால், அதில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு, பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர் மதிவேந்தன், பாகன் பொம்மன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்