கவர்னருடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திப்பு..!

தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளார்.

Update: 2022-06-02 09:04 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் கவர்னருடைய உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கும் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் நிலவக்கூடிய சட்ட ஒழுங்கு குறித்தும் முதல் அமைச்சர் கவர்னருடன் கலந்தாலோசிப்பார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென்ற தீர்மானங்கள் பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் கவர்னருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் காரணமாக வரக்கூடிய காலங்களில் அமைச்சர்கள் மாற்றம் இருக்குமா என்பது குறித்து இன்றைய சந்திப்புக்கு பிறகு தெரியவரலாம்.

Tags:    

மேலும் செய்திகள்