பள்ளி மாணவர்கள் இடையே செஸ் போட்டி

பள்ளி மாணவர்கள் இடையே செஸ் போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-27 19:15 GMT

ஸ்ரீரங்கம், ஜூலை.28-

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவானைக்காவல் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி செயலாளர் கஸ்தூரி ரெங்கன் தொடங்கி வைத்தார். போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க தலைவர் சத்யநாராயணன் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். முடிவில் தமிழ் ஆசிரியர் லட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்