வட்டார அளவிலான சதுரங்க போட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசுப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-21 17:27 GMT

திருப்பத்தூர், 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசுப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அறிவுத்திறன்

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியில் திருப்பத்தூர் வட்டாரத்தை சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள் என 26 பள்ளிகள் பங்கேற்றன.

மாணவர்கள் 68 பேரும் மாணவிகள் 62 பேர் கலந்து கொண்டனர். போட்டிக்கு தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் சதுரங்க போட்டியின் வரலாறு மற்றும் அது மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை எவ்வாறு வளர்க்கிறது என்பது பற்றி பேசினார்.

தொடர்ந்து நாராயணன், வார்டு உறுப்பினர் கண்ணன், சரண்யாஹரி மற்றும் கூட்டுறவு நாணய சங்க தலைவர் சேகர், ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தை புதுப்பட்டி பள்ளியும், 2-வது இடத்தை நெற்குப்பை பள்ளியும், 3-வது இடத்தை கோட்டையிருப்பு பள்ளியும் பெற்றன. 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதல் இடத்தை புதுப்பட்டியும், திருக்கோஷ்டியூர், கோட்டையிருப்பு பள்ளிகள் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்தன.

19 வயது

19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் திருப்பத்தூர், கோட்டை யிருப்பு, நெற்குப்பை ஆகிய பள்ளிகள் முதல், 2, 3-வது இடத்தை பெற்றன. மாணவிகளுக்கான போட்டியில் தேவாரம்பூர், நெற்குப்பை, இளையாத்தங்குடி ஆகிய பள்ளிகள் முதல், 2, 3-வது இடத்தைப் பெற்றன. 17 வயது பிரிவில் திருப்பத்தூர், டி.புதுப்பட்டி பள்ளிகள் முதல் மற்றும் 2, 3-வது இடத்தைப் பிடித்தன. 19 வயது பிரிவில் திருக்கோஷ்டியூர் பள்ளி முதல் மற்றும் 2-வது இடத்தையும், திருப்பத்தூர் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன.

மாவட்ட அளவிலான போட்டி

போட்டிகளில் பொதுமக்கள், மாணவர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் சிவகங்கையில் திங்கட்கிழமை நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கபட்டது. போட்டி முடிவில் ஸ்டீபன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்