கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவான சென்னை வாலிபருக்கு வலைவீச்சு
கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவான சென்னை வாலிபரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சிற்றம்பலம். இவரது மகன் ஆனந்த் (வயது 33). இவர் மீது திருச்சி கியூ பிரிவு போலீசில் போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளது. இந்த நிலையில் இவரை திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ளநோட்டு தடுப்புபிரிவு போலீசார் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் தலைமறைவாகிவிட்டார். ஆனந்த் மீதான கள்ளநோட்டு வழக்கு திருச்சி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆனந்த் ஆஜராகாமல் இருந்து வருவதால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி கள்ளநோட்டு தடுப்புபிரிவு மன்னார்புரம் திருச்சி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2422210, 94981 10803 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.