சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பங்கேற்கிறார்.

Update: 2023-08-06 01:13 GMT

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து மசினகுடியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் மைசூரு புறப்பட்டு சென்றார்.

அதன்பின்னர் மைசூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள மைதானத்தில், ஜனாதிபதிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர், அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்கிறார். அங்கு நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்