மாண்டஸ் புயல் எதிரொலி சென்னை-திருச்சி விமானம் ரத்து

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை-திருச்சி விமானம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2022-12-09 19:23 GMT

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புது டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு இரவு 10.40 மணிக்கு இயக்கப்படவிருந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்